மட்டு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் வைத்தியர் K.E.கருணாகரன் மதவழிபாடுகளுடன் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்தார்...



(சுமன்)


மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் வைத்திய கலாநிதி பேராசிரியர் K.E.கருணாகரன் அவர்கள் இன்றைய (11) தினம் புளியந்தீவு புனித மரியாள் பேiராலயம் மற்றும் புளியந்தீவு ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் வழிபாடுகளை மேற்கொண்டு புனித மரியாள் பேராலய பங்குத் தந்தை மற்றும் ஆனைப்பந்தி ஆலய குருக்கள் ஆகியோரின் ஆசியுடன் தமது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்தார்.


இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர் அ.கிருரஜன் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


எதிர்வரும் 2025.05.06 ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபை 18ம் வட்டாரம் புளியந்தீவு தெற்கு 18ம் வட்டாரத்தில்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.