ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்?


தற்போது இலங்கை ரூபாயின் பெறுமதியானது  அமெரிக்க டொலருக்கு நிகரான மேலும் உயர்வடைந்துள்ளது.  
இலங்கை மத்திய வங்கி (ஊடீளுடு) வெளியிட்ட நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 300.62 ரூபாவாகவும், கொள்முதல் விலை 292.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 325.67 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 312.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 389.65 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 375.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 191.60 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 182.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.