கல்லடி கடற்கரை காற்றுடன் கலந்த பௌர்ணமி கலை விழா


கிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாநகரசபையும் இணைந்து நடாத்திய பௌர்ணமி கலை விழா நேற்று(13) மாலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வருகைதரும் சுற்றுலாப்பயணிகளை ஊக்குவிக்கும் வகையிலும் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கலைஞர்களுக்கான ஆற்றுகைக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களுக்கான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான களத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி வி.சிவப்பிரியா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்கள பணிப்பாளர் ச.நவநீதன்,மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.பார்த்தீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது இலங்கையில் புகழ்பூத்த மட்டக்களப்பினைசேர்ந்த மெல்லிரை கலைஞர்களின் பாடல் நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பல்வேறு கலைஞர்களின் ஆற்றுகைகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதி கௌரவிக்கப்பட்டதுடன் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.