கத்தார் நாட்டில் நடைபெற்ற கத்தார் சிலோன் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கத்தாரில் பணிபுரியும் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த வீரர்கள் பங்குபற்றிய பற்றி எப்சி(Batti FC) அணி சாதனை படைத்துள்ளது.
புத்தளம் ஜாகிரியன் காற்பந்தாட்ட கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கத்தார் சிலோன் கிண்ண என வர்ணிக்கப்படும் அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஐந்தாவது சுற்றுப்போட்டி அண்மையில் நடைபெற்றது.
கத்தார் நாட்டில் முதன்முறையாக சுற்றுப்போட்டியில் பங்குகொண்ட மட்டக்களப்பினை சேர்ந்த பற்றி எப்சி (Batti FC)அணியினர் பல பிரபல அணிகளையும் அனுபவம்வாய்ந்த அணிகளையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டது.
இறுதிப்போட்டியில் திறமையும் அனுபவமும் வாய்ந்த எவர் ரொக்ஸ் எப்சி (Everocks FC ) அணியினருடன் பலப்பரீட்சை நடத்தி நிலையில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தாலும் இரண்டாவது வெற்றி அணி என்ற பட்டத்தினை பற்றி எப்சி அணியினர் தன்வசப்படுத்திக்கொண்டனர்.