மட்டக்களப்பில் சாரணியத்தின் தந்தை பேடன் பவலின் பிறந்த தின நிகழ்வும் ஊர்வலமும்(VIDEO)


உலகில் அதிகளவான உறுப்பினர்களைக்கொண்ட அமைப்பான சாரணர் அமைப்பினை ஸ்தாபித்த சாரணியத்தின் தந்தையான பேடன் பவலின் 168வது பிறந்த தினமும் ஆசியாவின் அழகான நடாக இலங்கையினை மாற்றும் அழகிய நாட்டினை கட்டியெழுப்பும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இலங்கை சாரணியர் சங்கமும் இணையும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விசேடமாக இனங்களிடையே ஒற்றுமையினையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையிலாக நடாத்தப்பட்டது.


மட்டக்களப்பு நீரூற்றுப்பூங்வாவில் உள்ள சாரணியத்தின் தந்தையான பேடன் பவலின் சிலைக்கு அருகில் இதன் ஆரம்ப நிகழ்வு இலங்கை சாரணிய சங்கத்தின் சிரேஸ்ட பிரதி ஆணையாளரும் மட்டக்களப்பு மாவட்ட பதில் ஆணையாளருமான அமிதன் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக இலங்கை சாரணிய சங்கத்தின் தலைமைக ஆணையாளரும் கிழக்கு மாகாண சாரணியர் சங்க இணைப்பாளருமான பி.சசிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை,அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது பேடன் பவலின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் கழுத்துப்பட்டியும் அணிவிக்கப்பட்டு சாரணியர் சத்தியப்பிரமான நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சாரணிய தந்தையின் பிறந்த நாளை குறிக்கும் வகையிலான கேக்கும் வெட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அழகிய வளமான நாட்டினை கட்டியெழுப்பி ஆசியாவில் அழகான நாடாக மாற்றும் அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் வகையிலான பாரியளவிலான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் இனங்களிடையேயான ஒற்றுமையின் அவசியத்தினை குறிக்கும் வகையிலான பதாகைகளையும் மாணவர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு நீரூற்றுப்பூங்வில் ஆரம்பமான ஊர்வலமான பிரதான வீதியுடாக மட்டக்களப்பு புகையிரத நிலையம் வரையில் சென்று அங்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்விலும் பங்குகொண்டனர்.