சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறையில் புதிய தலைவராக சிரேஸ்ட விரிவுரையாளர் வாகீசன்

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறையில் புதிய தலைவராக சிரேஸ்ட விரிவுரையாளர் தங்கராசா வாகீசன் அவர்கள் 01.01 .2025  அன்று  அதுவரை துறைத்தலைவராக பணியாற்றிய கலாநிதி நிர்மலேஷ்வரி பிரஷாந் முன்னிலையில் பணியேற்றுக் கொண்டார்.   

தங்கராசா வாகீசன் அவர்கள் தேற்றாத்தீவைச் சேர்ந்த காலம் சென்ற சின்னத்தம்பி தங்கராசா , திருமதி கருணையம்மா தங்கராசா அவர்களின் கனிஷ்ட  புதல்வராவார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் தனது இளம் நுண்கலைமாணி (BFA in Music) பட்டத்தையும் தனது  முது நுண்கலைமாணி பட்டத்தினை ( MFA in Music)  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது