இணைய வணிகத்தில் ஈடுபட்ட இளைஞன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சாய்ந்தமருதில்


இணைய வணிகத்தில் ஈடுப்பட்ட இளைஞன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை  இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த  20  வயதுடைய  இளைஞனே உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த இளைஞன் விரக்தியடைந்த நிலையில் ஒரு வகையான மாத்திரைகளை உட்கொண்டு நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்கை பலனளிக்காமையின்  காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த இளைஞன் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சவளக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை,  அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இணையம்  ஊடாக  புதிய வகை வணிக உத்திகள் உருவாக்கப்பட்டு  கொடுக்கல் வாங்கல்  பல்வேறு தரப்பினரை இலக்கு வைத்து செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த இணைய  வணிகம் சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதில் ஆர்வம் கொண்டு பல இளைஞர்கள் முதல் பலர்  பங்கேற்று வருகின்றனர்.