மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
இலண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் முழுமையான நிதி பங்களிப்புடன் அகிலன் பவுன்டேசன் ஊடாக இந்த உதவிகள் இன்று பல்வேறு இடங்களில் வழங்கிவைக்கப்பட்டன.
இலண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயம் மற்றும் அகிலன் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் மு.கோபாலகிருஸ்ணனின் ஆலோசனைக்கு அமைவாக, அகிலன் பவுண்டேசனின் இலங்கைக்கான இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரனின் ஒழுங்கமைப்பில் சமூக செயற்பாட்டாளர் திருமதி ரஜனி ஜெயப்பிரகாஸினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
இதன்கீழ் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி உட்பட நான்கு கிராமங்களில் உள்ள 100குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.