கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூவரை தேடும் பணி -ஒருவரின் உடல் மீட்க்கப்பட்டுள்ளது


திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி உமிரி பிரதேசத்தில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூவரை தேடும் பணி நடைபெற்றுவரும் நிலையில் ஒருவரின் உடல் மீட்க்கப்பட்டுள்ளது.
இத்துயரச்சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்ற நிலையில் நேற்றிரவு முழுவதுமாக தேடும் பணிகளை கடற்படையினர் பொலிசார் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஒருவரது உடல் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கடற்கரையில் விiளாயடிக்கொண்டிருந்த தனது மகன் மற்றும் மருமகன் ஆகியோரை கடல் அலை இழுத்துச் செல்வதை அவதானித்த தந்தை பிள்ளைகளை மீட்பதற்காக கடலில் இறங்கியுள்ளார்.
இருப்பினும் நீரில் தத்தளித்த இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தந்தையும் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம் இச்சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று (25) காலை சென்ற அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் நிலைமைகளை கண்டறிந்து கொண்டதுடன் கடற்படை மற்றும் பொலிசார் பிரதேச செயலாளர் உள்;ளிட்டவர்களுடன் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.