மட்டக்களப்பு நகரில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி உயர்தர பரீட்சை தொடர்பான பிரதான நிலையமாக செயற்பட்டுவரும் நிலையில் அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த 57வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
நேற்று அவருக்கு பாடசாலையில் கடமையிலிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.