தமிழ் தேசிய அரசியலில் இளைஞர்களை உள்ளீர்த்து அவர்களை மக்களுக்காக போராடும் நிலைமையினை இந்த நாளில் ஏற்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப் மேரி அடிகளார் தெரிவித்தார்.இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடி,புதுமுகத்துவாரத்தில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அவருக்கு முன் சென்றவர்கள் போரிலே உயிர் பறிக்கப்பட்டு திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குண்டு போட்டுக் கொண்டார்கள் இவர்கள் அனைவருக்கும் திலீபன் ஒரு முன்மாதிரியாக முன்னோடியாக சென்றுள்ளார்.
நாங்கள் இங்கு வந்தது இங்கு வாழ்வதற்கு அல்ல நாங்கள் இங்கு வாழும் போது நீதிக்கு உண்மைக்கு நேர்மைக்கு குரல் கொடுத்து வாழ வேண்டும் என்று ஆக்கப்பட்டவர்கள் மனிதர்கள் இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களும் ஆனந்தமாக சந்தோஷமாக அன்பு செய்து மன்னித்து வாழ வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார்.
தியாகங்கள் பல செய்தோம் ஆயுதம் எடுத்துப் போராடினோம் அடுத்தவர்களை கொள்வதற்காக எங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆகவே இந்த நாளில் மீண்டுமாக தியாக தீபம் திலீபனை பார்க்கின்ற போது நமது இளைஞர்கள் இப்போது வரவேண்டும் அரசியல் சாக்கடை என்று கதை அது முன்னர் இப்போது அரசியல் ஒரு குளோபல் ஆர்ட் ஆப் பொலிடிக்ஸ் என கூறப்படுகின்றது.
கத்தோலிக்க திருச்சபை ஒரு காலத்தில் அரசியலில் ஒதுங்கி இருந்த குழுக்களை கூறியது நாங்களும் ஒதுங்கி இருந்தது மாத்திரம் அல்லாது துணிந்து நின்றவர்களும் பலவிதமாக அச்சுறுத்தப்பட்டோம் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்பதற்காக அதே கத்தோலிக்க திருச்சபை 65 ஆண்டுகளில் 2500 ஆயர்கள் முன்னிலையில் ஒவ்வொரு ஆயருக்கும் இரண்டு உதவி ஆயர்கள் 7500 ஆயர்கள் ஒன்றாக இணைந்து 16 ஆவணங்களை கொண்டு வந்தார்கள் கத்தோலிக்க திருச்சபை எவ்வாறு இருக்க வேண்டும் என்று.
இந்த அரசியல் கட்டாயமாக இளைஞர்கள் ஈடுபாடு கொள்ள வேண்டும் அவர்கள் அதற்கு ஏற்ற வகையில் பயிற்றப்பட வேண்டும் எல்லோரும் இந்த அரசியலில் சேர்ந்து மக்களுக்காக உழைக்க வேண்டும்.
எங்களுக்கு தேவை தற்பொழுது திலீபனை நினைவு கூறுகின்றோம் அவருக்காக யாழ்ப்பாணத்திலும் பெரிதாக செய்கின்றார்கள் இளைஞர்கள் இதில் ஈடுபாடு செய்ய வேண்டும் ஆனால் இளைஞர்கள் கையில் இப்போது இதனை காண்கின்றோம் தொலைபேசியை அதில் தான் அனைத்தையும் செலவு செய்கின்றார்களே தவிர அந்த தொலைபேசியில் அசிங்கமான முகப்புத்தகம் போன்ற விடயங்களை செயற்படுகின்றார்களே தவிர இன்னமும் இந்த தொலைபேசி ஊடாக ஆங்கிலம் அறியலாம் வரலாறு அறியலாம் இவற்றை கவனம் செலுத்துகின்றார்களா என்றால் இல்லை.
இதைத்தான் பாப்பரசர் கூறுகின்றார் இளைஞர்கள் கையில் தொலைபேசி கவனம் என்று.
இன்றைய இந்த தியாக தீபம் திலீபனின் நன்னாளில் நாங்கள் ஒன்று மட்டும் கவனத்தில் கொள்வோம் இளைஞர்களை உருவாக்குவோம் அரசியலில் ஈடுபாடு கொண்டு மக்களுக்காக தங்கள் உயிரைக் கொடுப்பதற்கு மாத்திரமல்ல மக்களுக்காக உண்மையைச் சொல்ல பயந்து ஓடாது துணிந்து நிற்க ஆகவே தந்தை செல்வா நிமிர்ந்து நின்றார் அவர் கூட கூறினார் தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தான் இப்போது தியாகிகளை அனைவரும் பெருவாரியான விண்ணகத்தில் இறைவனோடு இருக்கின்றார்கள்.
அனுரவின் இந்த புதிய அரசில் நல்லது நடக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. பல மக்களுக்கு அது தான் இருக்கின்றது. அனைத்தும் நேர்மையாக நடக்க வேண்டும் அவரூடாக உண்மையான அரசியல் தளிரிட்டு வளர வேண்டும். அந்த அரசியலில் அந்த தளிர் விடும் அரசியலில் தமிழர்களும் வளர வேண்டும் தமிழர்களும் அனைத்து உரிமைகளையும் பெற்று உரிமையோடு வாழ வேண்டும்.