மட்டக்களப்பில் ஜனாதிபதிக்கு மாணவி ஒருவர் தனக்கு சித்திரபாட ஆசிரியர் ஒருவர் வாய்மூலமாக பாலியல் துஸ்பிரயோகம் பிரயோகித்து வருவதாக செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசாரின் விசாரணைக்கு செல்லாது தலைமறைவாகி வந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (7) சரணடைந்த ஆசிரியரை எதிர்வரும் 20 ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.மட்டக்களப்பில் பெண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவருக்கு கற்பித்துவரும் ஆசிரியர் ஒருவர் வாய் மூலமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக அவருக்குவாய் மூலமாக பாலியல் துஸ்பிரயோகம் கொண்டவார்த்தைகளை பிரயோகித்து வந்துள்ளதுடன் இது தொடர்பாக எவருக்கும் தெரிவித்து என்னை ஒன்றும் செய்யமுடியாது, உயர்தர மாணவி பாலியல் துஸ்பிரயோகம் என முகநூலில் பதவிவிடுவேன் எனவும் தான் ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர் எனவும் என்னை எதிர்த்தால் இந்த மாவட்டத்தில் இருக்கமுடியர்து என அச்சுறுதியுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அவரது வகுப்பாசிரியர் மற்றும் பெற்றோருக்கு தெரிவித்துவந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 11ம் திகதி குறித்த ஆசிரியர் குறித்த பாடத்திட்டத்தில் இல்லாத படங்களை வரையுமாறும் இல்லாவிட்டால் வகுப்பறையில் இருந்து வெளியேறுமாறும் தெரிவித்த நிலையில் மாணவி வகுப்பறையில் இருந்து வெளியேறி அதிபரிடம் முறையிட சென்ற நிலையில் அவர் இல்லாத நிலையில் வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த அநீதியை பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் பாடசாலை பிரதி அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்த நிலையில் அவர் பாடசாலை அதிபர் கவனத்திற்கு கொண்டுவந்து பெற்றோரிடம் கடிதம் ஒன்றைவாங்கி தாங்கள்; தீர்வு பெற்றுதருவதாக உத்தரவாதமளித்த நிலையில் மீண்டும் பாடசாலைக்கு மாணவி சென்ற நிலையில்; குறித்த ஆசிரியர் மாணவியை கல்வி கற்கும் சூழலை குழப்பிவந்த நிலையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக ஜனாதிபதிக்கு சிங்கள மொழியில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி உடன் விசாரணை செய்யுமாறு பொலிசாருக்கு கடந்த 22ம் திகதி பணிப்புரை விடுத்ததையடுத்து பொலிசாhர் பாதிக்கப்பட்ட மாணவியிடமும் பாடசாலை அதிபார் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வாக்கு மூலத்தை பெற்ற நிலையில் பொலிஸ் நிலையத்துக்கு குறித்த ஆசிரியரை வருமாறு அழைக்கப்பட்டபோதும் அவர் பொலிஸ் நிலையம் செல்லாது தலைமறைவாகி வந்துள்ள நிலையில் குற்றவியல்சட்டம் 345 ம் பிரின் கீழ் வழக்கு தாக்குல் செய்த நிலையில் தலைமறைவாகிய ஆசிரியர் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணிp பிரேம்நாத் தலைமையிலான் சட்டத்தரணிகள் ஊடாக முன்நகர்வு பத்திரம் விண்ணப்பித்து நீதின்றில் சரணடைந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு நீதவான் எடுத்துக் கொண்ட நிலையில் இதனையடுத்து பாதிக்கப்பட் சிறுமி சார்பில் சட்டத்தரணி கமலநாதன் ஆயராகி குறித்த ஆசிரியருக்கு பிணைவழங்க வேண்டாம் என வழக்கு தொடர்ந்த மட்டக்களப்பு பொலிசாரும் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைத்த நிலையில் நீதவான் குறித்த ஆசிரியரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இவர் கிழக்கில் செயற்படும் ஆளும்கட்சி அரசியல் கட்சியொன்றின் பிரதேச இணைப்பாளராக கடமையாற்றிவருகின்றார்.
இதேவேளை இந்த ஆசிரியர் தலைமறைவாகியுள்ளதாகவும் கைதுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றத்தில் இன்று இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.