மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நடைபெறவுள்ளது.
நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானோர் உற்சவத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் தலைமையில் மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்ட.
இதன்போது மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்குளத்தினை அண்டிய பகுதிகளிலிருந்து குப்பைகூழங்கள் அகற்றப்பட்டதுடன் ஆலய உள்வீதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டன.
அத்துடன் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான பகுதிகளும் இனங்காணப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.