தமிழரசுக்கட்சின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழரசுக்கட்சின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் அஞ்சலி பதாகையும் கட்டப்பட்டது. அத்துடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
தலைவர் சம்பந்தன் ஐயா மரணமான அந்த துக்கரமான செய்தி நேற்று இரவு 11.30மணியளவில் கிடைத்தது.இந்த செய்தியானது தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைவருக்கும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் துக்கத்தினை தந்த செய்தியாகயிருக்கின்றது.
ஆறு தசாப்தமாக தன்னை தமிழ் தேசிய அரசியலுக்காக அர்ப்பணித்த ஒருவர்.தமிழினத்தின் உரிமைக்காக ஆறு தசாப்தமாக உழைத்த ஒருவர்,குரல் கொடுத்த ஒருவர்.அவரது இழப்பானது ஈடுசெய்யமுடியாத இழப்பாகவே எப்போதும் இருக்கும்.
இந்த நாளில் எமது கட்சி கிராம,பிரதேச மட்ட உறுப்பினர்கள் ஏனையவர்களுக்கும் இந்த இழப்பினை தெரியப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இறுதிக்கிரயைகளில் முடிந்தளவு உறவுகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.