ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது 2024 ஆண்டுக்கான விருதை வென்ற மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளருக்குமாவட்ட அரசாங்க அதிபர் வாழ்த்து


ஜனாதிபதி சுற்றுச்சூழல்   விருது 2024 ஆண்டுக்கான விருதை  வென்ற மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளருக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வழிகாட்டலின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் (CEA) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் ஜனாதிபதி சுற்றுச்சூழல் 2024  விருதின் வெள்ளி விருதினை  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது

தேசிய ரீதியில் அரச நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் மீதான பங்களிப்பு  தொடர்பான பகுதிக்குள்  ஜனாதிபதி சுற்றுச்சூழல்  விருதுக்கு போட்டியிட்ட 902  அரச நிறுவனங்களில்  பல்வேறு பகுதியில் போட்டிக்கு விண்ணப்ப ம் செய்யப்பட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கட்ட பரிசீலனையில் பின்  மட்டக்களப்பு மாவட்டத்தில்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டு வெள்ளி விருதினை  பெற்றுக்கொண்டது . 

இந்த விருதினை  பெற்று மாவட்டத்திற்கு. ,பிரதேச செயலகத்துக்கும்  பெருமை சேர்த்த பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னத்திற்கு  அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் தமது வாழ்த்தினை தெரிவித்தனர்.

இந்த போட்டிகளுக்காக தேசிய ரீதியில்  902 அரச நிறுவனங்கள் விண்ணப்பித்திருத்த நிலையில் பல்வேறு கட்ட பரிசீலனை
போட்டியின் மத்தியில் தென் எருவில் பற்று பிரதேச செயலகம்  வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.