அரசாங்க அதிபருக்கும் ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் விசேட சந்திப்பு!

 


ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனை மாவட்ட செயலகத்தில் இன்று (07) திகதி சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் அரசாங்க அதிபருடன் அறிமுகம் செய்யப்பட்டதுடன்
தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
தேசிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களினால் முன்னேடுக்கப்படும் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கதலைவர் ஆ.பாலகிருஸ்னன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.