இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு சீருடை,விளையாட்டு உபகரணங்களை வழங்கிய புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகம

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு அங்கிகள் வழங்கிவைக்கப்பட்டன.


இதனை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று காலை இந்துக்கல்லூரி அதிபர் கே.பகிரதன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவி உடற்கல்வி பணிப்பாளர் கே.லவகுமார்,புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.கெமில்டன் உட்பட புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள மாவட்ட,மாகாண,தேசிய மட்ட விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் நன்மை கருதி அவர்களுக்கான சீருடைகள் வழங்கப்பட்டன.அத்துடன் விளையாட்டுத்துறையினை மேம்பாட்டிற்கான விளையாட்டு உபகரணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.