மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களில் 111பரீட்சை நிலையங்களில் சாதாரண தர பரீட்சை ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை அமைதியான முறையில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு,பட்டிருப்பு,மட்டக்களப்பு மேற்கு,கல்குடா,மட்டக்களப்பு மத்தி ஆகிய வலயங்களில் இன்றைய தினம் இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 111 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 13902 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்குகின்றனர்.
பரீட்சை நிலையங்களை இணைப்புச்செய்யும் வகையில் 14 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பாடசாலை பரீட்சார்த்திகளாக 10037பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 3865பேரும் தோற்றுவதுடன் இதில் தமிழ் மொழியில் 13826 சிங்கள மொழியில் 10பேரும் ஆங்கில மொழியில் 66பேரும் தோற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து பெற்றோரின் ஆசிர்வாதகங்களைப்பெற்று பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது.