அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் தீர்த்தோற்சவம்.


அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் தீர்த்தோற்சவமானது பாபநாசம் தீர்த்தக் கிணற்றடியில் பக்தர்களின் பேராதரவுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் ஆகும். இங்கு தீர்த்தமாடுபவர்களின் பாவம் தொலைந்து விடும் என்பது ஐதீகம்.
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 11ம் நாள் (24) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உத்தர நட்சத்திரத்தில் காலை 10 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தொரு நாட்கள் திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ் தீர்த்தோற்சவத்தில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 நாளை (11) பூங்காவனத் திருவிழாவும், நாளை மறுநாள் (12) தெப்பத்திருவிழாவும் நடைபெற திருவருள் கூடியுள்ளது.