(ஆர்.நிரோசன்)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2024ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (14) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.
இப்போட்டியானது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் இடம் பெற்றது.
இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர்.சிவராஜா கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் பிரதிக்கல்விபணிப்பாளர் .ரவிராஜா மற்றும் கிழக்கு மாகாண ராணுவ 38 வது படைத் தளபதி ஜி. எச் .நிலாந்த கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவல உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவக்குமார் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இவ் விளையாட்டு போட்டியின் முடிவில் காட்மன் இல்லம் 365 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,கோல்டன் இல்லம் 360புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,சோமநாதர் இல்லம் 310 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும், ஓல்ட் இல்லம் 265 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.இப்போட்டிகளில் இடம் பெற்ற ஆயுதங்களை ஏந்தியவண்ணமான அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.