மாற்றுத்திறனாளிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பொருட்கள், உபகரணங்கள் வழங்கலும்


கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் அலுவலகமும் இணைந்து நடாத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு 13.02.2024 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது. 

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே.இளங்குமுதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக ரீதியில் சிறப்பான தொழில் முயற்சியாளர்களாகவுள்ள மாற்றுத்திறனாளிகள் கௌரவிக்கப்பட்டதுடன் தையல் பயிற்சியினை பூர்த்தி செய்த பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டன.  மேலும் மாற்றுத் திறனாளி இல்லங்களுக்குத் தேவையான பொருட்களும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி முதலான உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர், பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.