மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வில் அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.
ஜேசுசபை அருட்பணி த.ஜீவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் விரிவுரையாளருமான அ.நிக்ஸன் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டார்.
தற்போதைய இலங்கையின் அரசியல் நிலைமை,வடகிழக்கில் தமிழர்களின் அரசியல் நிலைமை,சர்வதேச ரீதியிலான அரசியல் நிலைமை அதன்மூலம் தமிழர்கள் எதிர்கொள்ளு சாதக பாதகம் தொடர்பில் பல்வேறு கருத்துரைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,அரசியல் கட்சிகளின்
பிரதிநிதிகள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.