மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கிராமிய பாரம்பரியங்கள் தாங்கிய தமிழர்களின் பாரம்பலிய கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையிலான பொங்கல் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவசாய கிராமமான தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்ட கிராமத்தில் உள்ள வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயத்தில் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாரம்பரிய நெல்அறுவடை நிகழ்வுகளும், அத்துடன் பாரம்பரிய இசைக்கருவிகளின் இன்னியத்துடன் கலாசார நடைபவனியும் நடைபெற்றது.
அப்பிரதேசத்தில் உள்ள ஆலயங்களின் பொங்கல், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி என்பனவும் நடைபெற்றது.
பொங்கல் விழாவில் இளைஞர் விவசாயதிட்ட கிராம மக்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், அப்பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பாரம்பரிய நிகழ்வுகளுடன் பொங்கல் பொங்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.