மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் திருவெண்பாவை உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் இதன்போது பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு மாணவர்களுக்கான பரிசளிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன.
திருவெண்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிகளில்வெற்றிபெற்ற மாணவர்கள் கௌரவிப்பும் சுனாமியில் உயிர்நீர்த்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் இன்று நடைபெற்றது.
ஆலயத்தின் தலைவர் சி.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆலய பிரதமகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயமும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலமும் இணைந்து ஆலய முன்றிலில் நினைவேந்தல் நிகழ்வொன்றை ஏற்பாடுசெய்திருந்தது.
இந்த நிகழ்வில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.