களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவான பாதிப்பினை எதிர்கொண்ட பிரதேசமான பெரியகல்லாறின் பல்வேறு இடங்களிலும் இன்று காலை சுனாமியில் உயிர்நீர்த்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
பெரியகல்லாறு மத்திய பந்துவிளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மத்திய பந்துவிளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஆ.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆலய தலைவர்கள்,மததத்தலைவர்கள்,கிராம முக்கிஸ்தர்கள்,கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப்பேருரைகளும் நடைபெற்றன.
இதேபோன்று பெரியகல்லாறு ஜோன்டி பிறிட்டோ விளையாட்டுக்கழகம் கல்லாறு அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தியது.
அருட்தந்தை ஜோசப் நிகஸ்டன் பீற்றர்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர்,கழக உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்கள் நினைவுகூரப்பட்டனர்.
அத்துடன் கல்லாறு வலம்புரி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் தலைவர் சின்னத்தம்பி கோகுலராஜன் தலைமையில் சுனாமியில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றது.