களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

(சிந்து)
சுனாமி நினைவேந்தல் மண் முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலலகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவேந்தல் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய முன்றிலில் உணர்வு பூர்வமாக பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் இடம் பெற்றது.

தேசிய அனர்த்த பாதுகாப்பு தனித்தை முன்னிட்டு மண் முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலலகத்தினால் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

தேசியக்கொடியேற்றப்பட்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 19 வருட நினைவு தினத்தினை நினைவு படுத்தும் முகமாக 19 ஈகை சுடர் ஏற்றப்பட்டது.

இதன்போது சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அனர்த்த முகாமைதுவ அபிவிருத்தி உத்தியோகத்தர் பிறேமமாலா பாஸ்கரினால் அனர்த்தம் தொடர்பான விளிப்புணர்பு கருத்துரையும் இடம் பெற்றது. 

நினைவேந்தரின் நினைவு கூறுமாக ஆலய வளாகத்தில் தென்னை மரக்கன்று ஒன்றும் பிரதேச செயலாளரினால் தென்னை மரக்கன்று நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.