புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட இரத்ததானமுகாம்

சுனாமி அனர்த்ததின்போது உயிர்நீர்த்த உறவுகளின் நினைவாக மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூரில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அனுசரணையுடன் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

கல்லடி திருச்செந்தூரில் உள்ள சுகாதார பணிமனையில் இந்த இரத்த தான நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது அருட்தந்தைகளான ஜோசப்மேரி மற்றும் அருட்தந்தை க.ஜெகதாஸ் ஆகியோரினால் உயிர்நீர்த்தவர்களுக்கான பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து இரத்ததான முகாம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் தலைமையில் நடாத்தப்பட்டது.

இதன்போது உதிரம்கொடுத்து உயிர்காக்கும் உறவுகளுக்கான மரக்கன்றுகள் வழங்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் இந்த மரக்கன்றுகளை இயற்கையின் மொழி அமைப்பினர் வழங்கிவைத்தனர்.