பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பின் கீழ் எரிபொருள் விலை சுமார் 10% வரை உயரும் என ஜனாதிபதி செயலகத்தின் அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. ஏரந்த கூறியுள்ளார்.
மேலும், எரிபொருள் மீதான 7.5% துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியை ஜனவரி முதல் நீக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து அறிவிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் தொழிற்சங்க உறவுகள் பிரிவு நடத்திய மாநாட்டிலேயே பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனால், அடுத்த வருடம் (2024) ஜனவரி முதலாம் திகதி முதல் VAT 18% அதிகரிக்கப்பட்டாலும், எரிபொருள் விலை மீதான வரி 10.5% மட்டுமே அதிகரிக்கும் என பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.