மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியில் நேற்று மழை காரணமாக வீடு ஒன்று உடைந்து வீழ்ந்துள்ள நிலையில் அங்கிருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பகுதியில் மழை பெய்துவருவதன் காரணமாக பல பகுதிகளில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
நேற்று மாலை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியில் காற்று காரணமாக வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த குடும்பம் தற்போது உறவினர் வீட்டில் வசிக்கும் நிலைமையேற்பட்டுளள்து.
இதேநேரம் குறித்த குடும்பத்திற்கு உதவிகள் வழங்குவதற்கு முன்வரவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.