உப்போடை புனித லூர்து அன்னை ஆலயத்தில் நத்தார் விசேட ஆராதனைகள்


ஜேசு கிறிஸ்துவின் மகிழ்ச்சியை கொண்டாடும் நத்தார் பண்டிகையினை முன்னிட்டு நள்ளிரவு தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில்இரவு நத்தார் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு உப்போடை புனித லூர்து அன்னை ஆலயத்தில் நத்தார் விசேட ஆராதனைகள் நடைபெற்றது.

புனித லூர்து அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை ஜேம்ஸ் சுரேஸ் தலைமையில் இந்த விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது ஜேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது.

நத்தார் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அருளாசி வழங்கப்பட்டது.கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தது.