போரதீவுப்பற்றில் கர்ப்பிணி பெண்களுக்கான போசாக்கு திட்டம் முன்னெடுப்பு

(ரஞ்சன்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஏற்பாட்டில் மிகவும் பொருளாதார நெருக்கடியில் உள்ள கர்ப்பிணிப்பெண்களுக்கான போசாக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான நிதி 900790 ரூபாய்  ஒதுக்கீட்டின் மூலம் கர்பிணி தாய்மார்களுக்கு போசாக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்படுகின்றன.

போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் வி.கௌரிபாலன் தலைமையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டுவருகின்றது.


வெல்லாவெளி சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலகத்தில் உள்ள 43 கிராஉத்தியோகஸ்தர் பிரிவில் உள்ள 15 தாய்சேய் பாராமரிப்பு பிரிவில் உள்ள 372 கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கான நெத்தலிகருவாடு,கொண்டைக்கடலை,மைசூர்பருப்பு,சிவப்பு அரிசி ஆகிய உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின் போரதீவுப்பற்று பிரதேசசபை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மூ.திவாகரன் மற்றும் தாய்சேய் உத்தியோகஸ்தர்,பிரதேசசபை ஊழியர்கள்,கர்ப்பிணி தாய் மார்கள் கலந்துகொண்டனர்.

போரதீவுப்பற்று பிரதேசசபையினால் வருடாவருடம் சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக கர்பிணி தாய்மார்களுக்கு போசாக்கான உணவுப்பொதிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாககும்.