டெங்கு பரவல் சடுதியாக அதிகரிப்பு


மழையுடனான வானிலையின் காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது என  தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் 45 வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று  டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 73 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.