போரதீவுப்பற்று பிரதேசசபையின் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சிரேஸ்ட பிரஜைகள் கௌரவிப்பும்


(ரஞ்சன்)

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சிரேஸ்ட பிரஜைகள் கௌரவிப்பும் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில் பிரதேசசபை செயலாளர் வி.கௌரிபாலன்  தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மாணவர்கள் மத்தியில் எழுத்தாற்றலையும் வாசிப்பு பழக்கத்தையும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகள் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் கீழ் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் இதன்போது பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஆத்துடன் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு சமூகத்தின் மத்தியில் அர்ப்பணிப்பு மிக்க பணிகளை அற்றிவரும் சிரேஸ்ட பிரஜைகளும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் சனசமுக அ.உத்தியோகஸ்தர் திருமதி.கோ.இளங்கீரன், சனசமுக அ.உத்தியோகஸ்தர் மு.கருணாநிதி, உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் நூலக உதவியாலர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களினால் கலை பல்வேறு நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.