சாதனை படைத்துள்ள குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலய மாணவர்கள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுணதீவு,குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலய மாணவர்கள் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியான நிலையில் பாடசாலைகள் மட்டத்தில் முடிவுகள் வெளிப்படுத்தப்பட்டன.

குறித்த பாடசாலையில் 27மாணவர்கள் தோற்றிய நிலையில் 08 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்துள்ளதுடன் சு.ஹர்ஜிதன் 162 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.

மிகவும் பின்தங்கிய பகுதி மாணவர்களைக்கொண்ட குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் தோற்றிய மாணவர்களுள் 100புள்ளிகளுக்கு மேல் 22மாணவர்கள் பெற்றுள்ளதுடன் ஒரேயொரு மாணவன் 65 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.

ஐந்தாம்
தர புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையின் மாணவர்கள் 96.3 வீத சித்தியைப்பெற்றுள்ளதாகவும் அதற்கு முழுமையான அர்ப்பணிப்பு செய்து கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்த பாடசாலையின் ஆசிரியரும் பிரபல ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி ஆசிரியருமான எஸ்.மோகன் அவர்களுக்கு பெற்றோரும் பழைய மாணவர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.