நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இயந்திர கோளாறு !


நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தின் உயர் அழுத்த ஹீட்டர் அமைப்பு திடீரென செயலிழந்ததன் காரணமாக நேற்று (17) இரவு முதல் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை விசேட அறிக்கை ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையை வழமைக்கு கொண்டு வர தேவையான பூர்வாங்க பணிகளை  அனல்மின் நிலைய ஊழியர்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரத்தின் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து தற்போது அதன் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி,  மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரத்தை விரைவில் மின்சாரம் உற்பத்திக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மின்சார விநியோகம் தடைபடாது எனவும், இந்த பராமரிப்பு காலத்தில் அதிகபட்சமாக நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கும் என அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.