அண்மையில் சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய மதகுருவான மௌலவி ஒருவர் தனது மத சுதந்திரத்திற்கு அப்பால் தமிழர்களையும் தமிழர் பின்பற்றும் சைவ மதத்தினையும்; தவறான வார்த்தைகளால் நிந்தித்து பேசி உள்ளமையினை வன்மையாக கண்டிப்பதாக அக்கரைப்பற்று இந்து சமூக ஒன்றியம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.அக்கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்>
இஸ்லாமிய மதகுருவான அவர் சைவ மதத்தைப் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது. பரத நாட்டியம் அதன் தத்துவம் அதில் குறிப்பிடும் முத்திரைகளின் தத்துவம், இறைவனுக்கும் பரதத்திற்கும் இடையிலான தொடர்பு, இறைவனின் தத்துவச் சிறப்பு அதை கடைப்பிடிக்க வேண்டியவர்களின் ஒழுக்கம், உடை முறைமை, பண்பு இவை பற்றி எதுவும் புரியாது பிதற்றுகின்றார்.
பரதம் என்பதன் பெயர் வந்த காரணம் அதற்குள் எத்தனை வகையான நாட்டியம் இருக்கின்றன. இதை எவ்வாறு பய பக்தியுடன் பயில வேண்டும் என்பதை எல்லாம் அறியாத இவர் அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு உலகத்தை கரைத்துக் குடித்தவன் போல பிதற்றுகின்றார்.
இவர் கருத்துப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆடவர்களைத் தொடர்பு கொள்வது எனும் விதி இந்து மதத்தில் கிடையவே கிடையாது. அப்படி அத்து மீறித்திரியும் பழக்கமுள்ளவர்கள் எவராயினும் எந்த மதத்தைச் சார்ந்தவராயினும் அவர்கள் பரத்தையர்களே என தான் கொண்ட கருத்தை தமிழர்கள் மீது சாடும் இந்த மதவாதி பரதநாட்டியத்தைப் பற்றி துளி கூட அறிந்திருக்கவில்லை.
வலைத்தளத்தைக் கையில் வைத்துள்ள இவர் பரத நாட்டியத்தைப்பற்றி வலைத்தளங்களில் என்ன கூறியிருக்கின்றார்கள் என்று அறிந்தாவது பேசியிருக்கலாம். மௌலவி அவர்களே இந்து மதம் 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்ற கொள்கையை கடைப்பிடித்து தொன்று தொட்டு பின்பற்றி வருகின்றது.இப்பழக்கம் எமது இந்து மத தர்மம். உங்கள் தனிப்பட்ட சிந்தனையற்ற பேச்சினால் இந்து சமூகம் குழம்பி போயுள்ளது.
நல்ல விடயங்களை பேசும் உங்களுக்கு என்ன நடந்தது?.. உங்கள் மீது சட்ட நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? என இந்து நிறுவனங்களை மக்கள் கேட்கின்றனர். உடனடியாக இக்கருத்தை பகிரங்கமாக வாபஸ் வாங்கி சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த உங்கள் பகிரங்க மன்னிப்பை கோருமாறு வேண்டுகிக்றோம். தவறில் மக்கள் முடிவே மகேசன் முடிவாகும்..