தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட மண்டூர் பொதுநூலகம் ஏற்பாடுசெய்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.
மண்டூர் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டிலும் சுவிஸ் உதயம் அமைப்பின் அனுசரணையுடனும் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மண்டூர் பொதுநூலக வாசகர் வட்டத்தின் தலைவர் பொ.பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் க.துரைநாயகம்,செயலாளர் அம்பலவாணர் ராஜன்,உபபொருளாளர் பேரின்பராஜா மற்றும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் மு.விமலநாதன்,செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன்,பொருளாளர் அக்கரைப்பாக்கியன்,உபசெயலாளர் நடனசபேசன்,உபதலைவர் வரதராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உப பொருளாளர் பேரின்பராஜா-பூங்கோதை தம்பதியினரின் இன்றைய திருமண நாளை முன்னிட்டு இந்த பரிசளிப்பு விழாவுக்கான அனுசரணை வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் பேச்சுகளும் நடைபெற்றதுடன் சிறப்புரைகளும் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மண்டூர் பொதுநூலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.