எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!!


நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கோ, ஐஓசி ஆகிய எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் லீட்டர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 351 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 421 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று(01) மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சினொபெக் நிறுவனமும் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 6 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதன்படி அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.

அதே நேரம் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலையை 10 ரூபா அதிகரித்துள்ளது. இதன் படி அதன் புதிய விலை 348 ரூபா ரூபாவாகும்.

அதே நேரம் லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 61 ரூபா அதிகரித்துள்ளதுடன்அதன் புதிய விலை 417 ரூபாவாகும்.

எனினும் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாத நிலையில் 358 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.