காயங்களுடன் வாகரையில் கரையொதுங்கிய ஏழு டொல்பின்கள் -மீண்டும் கடலுக்குள் சென்றது


மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காயாங்கேணி பகுதியில் உள்ள கடற் பகுதியில் காயங்களுடன் கரையொதுங்கிய 07டொல்பீன்கள் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

இன்று காலை அப்பகுதி மீனவர்கள் குறித்த டொல்பின் மீன்கள் கரையொதுங்கியது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.


குறித்த டொல்பின் மீன்கள் காயங்களுடன் கரையொதுங்கிய நிலையில் குறித்த மீன்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன.

குறித்த பகுதிக்கு வருகைதந்த கடற்படையினர்,இராணுவத்தினர்,நாரா நிறுவனத்தினர்,வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் வருகைதந்து குறித்த மீன்களுக்கான சிகிச்சைகளை வழங்கினர்.

அதனை தொடர்ந்து குறித்த டொல்பின் மீன்கள் மீனவர்களினால் கடலுக்குள் மீண்டும் விடப்பட்டுள்ளது.