மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் (2023.10.23) கல்வி செல்வம் வீரம் என சகல சௌபாக்கியங்களும் பெற ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் திருமதி தட்சனா கௌரி தினேஸ் அம்மணி அவர்களின் தலைமையில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரின் பங்கேற்புடன் பிரதேச செயலகத்தின் பிரிவு ரீதியாக பூஜைக்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.