மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் குளத்தில் கசிப்பு போதை பொருளுடன் 31 வயது பெண் உட்பட 48 வயது ஆணுமாக இருவர் ஞாயிற்றுக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி போலிஸார் தெரிவித்தனர்.
கிரான்குளம் பகுதியில் உள்ள உள்ள இரு வீடுகளில் கசிப்பு போதை பொருளை மறைத்து வைத்திருந்த நிலையிலேயே இவர்கள் போலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
31 வயதுடைய பெண்ணிடமிருந்து 24 ,750 மில்லி லிட்டர் கசிப்பும் 48 வயதுடைய ஆண் ஒருவரின் வீட்டில் இருந்து 23, 250 அட கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைதான இருவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி போலிஸார் தெரிவித்தனர்.