ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் செப்டம்பர் 17 வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது. இன்று மாலை 3 மணி அளவில் ஆட்டம் தொடங்குகிறது.
மேலும், இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2 ஆம் திகதி இலங்கையில் நடக்கிறது.