யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் பிறந்து எட்டு நாட்களேயான குழந்தையொன்று தொடர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நயினாதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த மதிவதனன் சுதர்சாவிந் என்ற பிறந்து எட்டு நாட்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தை பிறந்து மூன்று நாட்களில் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி நயினாதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
