பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நமுனுகுல பகுதியில் உள்ள பாடசாலையில் மிகவும் கஸ்டமான நிலையில் உள்ள மாணவர்களுக்கு சுவிஸ் உதயம் ஊடாக உதவி வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நமுனுகுல,கணவரல்ல தோட்டப்பகுதியில் உள்ள மாணவர்களின் நிலைமைகள் குறித்து சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் தலைவர் சுதர்சன் தேவசகாயம் அவர்களின் பிள்ளைகளின் உதவியுடன் கணவரல்ல தோட்டப்பகுதியில் உள்ள சுமார் 50மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் புத்தக பைகள் வழங்கிவைக்கப்பட்டன.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் கிழக்கு மாகாண கிளையின் உறுப்பினர் அகிலன் மற்றும் பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான உதவிகளை கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக சுவிஸ் உதயம் முன்னெடுத்துள்ள நிலையில் மலையகப்பகுதியிலும் தனது உதவி திட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.