சுவிஸ் உதயம் ஊடாக திருக்கோவில் மக்களுக்கு உதவி


கிழக்கு மாகாணத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை கருத்தில்கொண்டு செயற்படும் சுவிஸ் உதயம் அமைப்பினால் பல்வேறு உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் வறிய நிலையில் வாழும் மக்களுக்கு உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம்,மண்டானை கிராமத்தில் வாழும் வறிய மக்களுக்கான ஆடைகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

சுவிஸ் உதயம் தாய்ச்சங்கம் சுவிஸ் நாட்டில் சேகரித்த உடுதுணிகள் உட்பட உதவிகள் மூலம் வழங்கப்பட்ட உடுதுணிகள் இன்றைய தினம் சுமார் 120குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

இது தொடர்பான நிகழ்வு மண்டானை கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் பொருளாளர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவற்றினை வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான முரளி,டினேஸ், சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன்,உபசெயலாளரும் ஊடகவியலாளருமான நடனசபேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அப்பகுதியில் எதிர்காலத்தில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கு சுவிஸ் உதயம் அமைப்பினால் பங்களிப்புகளை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இங்கு கருத்து தெரிவித்த சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் தெரிவித்தார்.