இந்த நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால் வடகிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தினை நாங்கள் கோரவேண்டும்.அதன் மூலமே தமிழர்களின் இறையான்மையினை பாதுகாக்காமுடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
சிங்ளவர்கள் தமிழர்களின் இரத்ததினை குடிக்கும் நோக்குடன் மட்டுமே செயற்படுகின்றனர்.அவர்களின் சிந்தனைகள் ஒருபோதும் மாறாது என்பதை கடந்தகால அவர்களின் சிந்தனை சொல்கின்றது.இவ்வாறான நிலையிலேயே இவ்வாறான முடிவுகளை எடுத்தல் என்ன என்பதை நான் மக்களிடம் விடுகின்றேன் என்றும் தெரிவித்தார்.
யூலைக் கலவரத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கதின் முன்னாள் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை உட்பட 53 போராளிகளின் நினைவான தமிழ்த் தேசிய வீரர்கள் தினத்தின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணகரம் (ஜனா) தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் உபதலைவர் இந்திரகுமார் பிரசன்னா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்கள் உள்ளிட்ட முன்னாள் பிரதிநிகள், கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கட்சியின் தலைவர் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவர் ஆகியோரால் குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், அனைவராலும் மலர்தூவி ஈகைச் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் இந்த அரசாங்கத்தின் அதிகளவான அரச தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.சிங்கள மக்களுக்கு தமிழர்களை எதிரியாக காட்டுக்கின்ற செயற்பாடுகளையே சிங்கள தலைவர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் சாதாரணமாக வரவில்லை.எமது போராட்டத்தின் உச்சக்கட்டமே ஜேஆர் ஜயவர்த்தனவை அடிபணிய வைத்தது.
சிங்களத் தலைவர்களின் பலரின் மூளையில் இருப்பதெல்லாம் தமிழர்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.எமது இனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைக்கின்ற அரசாங்கம் எவ்வாறு தமிழர்களுக்கான தீர்வைத் தர முடியும்.
வெறும் வெற்றுப் பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல், உதட்டளவில் பேசிக் கொள்ளாமல் எமக்குள் பல வேற்றுமைகள் இருந்தாலும் எமது மக்களுக்காக நாம் ஒற்றுமைப் பட வேண்டும். இந்த ஒற்றுமை புலம்பெயர் தேசத்து கட்டமைப்புகளும் ஒன்றுபட வேண்டும். அவர்களுடன் நாங்களும் இணைய வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்ட்மைப்பு தமிழ் நாட்டினை எந்தளவு பயன்படுத்தியது என்று பார்த்தால் அது பூச்சியமாகும். உதட்டளவில் தேசியம் பேசாமப் அனைவரையும் ஒன்றினைக்கின்ற செய்றபாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் செய்யும்,
இந்த நாட்டை மேலெ கொண்டு வருவதாக இருந்தால் இனப்பிரச்சனைக்கான தீர்வினை வழங்கி 13வது திருத்தத்தினுடைய சரத்துகள் அனைத்தையும் பூரணமாக அமுல்ப்படுத்தினால் புலம்பெயர் உறவுகளிடம் இருந்து முதலீடுகளை நாங்களே பெற்று நாட்டை வலுவாக்க முடியும்.
இன்று தோண்டும் இடங்களில் எல்லாம் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.அதற்காக முல்லைத்தீவில் எமது காணாமல்போனவர்களின் உறவினர்கள்போராடினார்கள்.நியாயமான போராட்டம்.தமது உறவுகள் இதில் புதைக்கப்பட்டார்களா என்ற கேள்வியை எழுப்புகின்ற போராட்டம்.எமது இனத்தை ஒழிக்கவேண்டும் என்று செயற்படுகின்ற எமது அரசாங்கம்.
அரசியல் சாசனத்தை மீறுகின்ற ஜனாதிபதி உட்பட ஏனையவர்கள் அந்த அரசியல்சாசனத்தை எவ்வாறு முறையாக நடைமுறைப்படுத்துவார்கள்.
தமிழர்களுக்கான தீர்வு விடயம் தொடர்பில் இந்தியாவுக்கு கடிதம் எழுதுவதில் பல பிரிவுகளாக கடிதங்களை கொடுத்தார்கள்.இதன் எதிரொளியாக ஜனாதிபதி சொன்னார் நீங்கள் ஒற்றுமையாக வந்தால் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று.எவ்வளவு வெட்ககேடானது.
நாங்கள் இனத்தின் சார்பாக கட்சிகளை நடாத்துகின்ற கட்சிகள்.போராடிய அனைத்து போராளிகளும் இந்த நிலத்தினை மீட்பதற்காக மரித்தார்கள்.அந்த வலித்த இடத்தில் நின்றுகொண்டு நாங்கள் நிலம் பாதுகாக்கப்படவேண்டும்,இனப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று சொல்கின்றோம்.இதனை உதட்டளவிலேயே சொல்கின்ற வெட்ககேடான விடயத்தினை பார்க்ககூடியதாகவுள்ளது.
வெறும் வெற்றுப்பேச்சுகளுக்கும் வெறும் உதட்டளவில்பேசுகின்றவற்றை இனியும் பேசாதீர்கள்.நாங்கள் ஒன்றாக இணைந்து பலமாகயிருக்கவில்லையென்றால் எங்களது தேசத்தினையும் மக்களையும் நாங்கள் காப்பாற்றமுடியாது.எங்களுக்குள் வேற்றுமைகள் இருந்தாலும் ஒரு குடையின் கீழ் நாங்க்ள அணிதிரளவேண்டும் என்பது இந்த நாளில் எனது கோரிக்கையினை விடுகின்றேன்.நாங்கள் ஒற்றுமைப்படவில்லையென்றால் எமது இனத்தினை யாரும் காப்பாற்றமுடியாது.