மட்டக்களப்பு வவுணதீவுபிரதேச செயலக பிரிவில் அண்மைக் காலமாக உப உணவு மற்றும் தென்னை பயிர்ச் செய்கையாளர்கள் காட்டு யானைகளின் தொல்லைகளினால் பெரும் பாதிப்புக்குள்ளாயிருப்பதாக அறிவிக்கப்படுகிறது
இதற்கமைய நேற்றிரவு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் இருட்டுச்சோலைமடு பகுதியில் காட்டு யானை தென்னந்தோட்டங்களில் உட்புகுந்து தென்னை மர செய்கையை பெரிதும் நாசப் படுத்தியுள்ளதாக இப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சுமார் ஐந்து வருடங்களாக வளர்த்தெடுக்கப்பட்ட இந்த தென்னை மரங்களை காட்டு யானை ஒரே இரவில் அளித்து நாசமாக்கி பெரும் நஷ்டத்தினை உண்டாக்கியிருப்பதாகதெரிவிக்கும்இந்தவிவசாயிகள் இத்தகைய பெரும் நஷ்டங்களுக்கு உதவுவதற்கு அரசாங்க அதி காரிகள் முன்வ ரவேன்டுமென்றும்கோரிக்கை விடுக்கின்றனர்.
தாம் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ள போதிலும் இதற்கு ஏதா வது உதவிகள் வழங்க முன்வரா விட்டால் நாட்டுக்கு வருமா ன த்தை தேடி தரக்கூடிய இந்ததென்னை பயிர்செய் கையில் ஈடு படாது வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பை நாடவேண்டி வருமென்றும் கவலை தெரிவிக்கின்றனர்.