இறக்குமதி முட்டைகள் இன்று முதல் விற்பனை!!


இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பல்பொருள் அங்காடிகளின் ஊடாக கொள்வனவு செய்யும் வாய்ப்பு இன்று(27) முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக 35 ரூபாவிற்கு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஷாந்த நிரியெல்ல தெரிவித்தார்.

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பல்பொருள் அங்காடிகளின் ஊடாக 40 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என அவர் கூறினார்.

இதனிடையே, உள்நாட்டு முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை கடந்த 25 ஆம் திகதி நள்ளிரவு முதல் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.