திருகோணமலையில் பசுமைத்திட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு


திருமலை நிருபர் சூரியா).        

திருகோணமலையில் பசுமைத் திட்டம்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் பசுமைத் திட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன்,   2023.06.07 அன்று திருகோணமலை  உயர் தொழிநுட்பக் கல்லூரியில் (ATI) சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளி மரம் நடுதல் நிகழ்வு நடைபெற்றது.                     

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் இந்நிகழ்வு பற்றிய விளக்கமும்  வழங்கப்பட்டது.                    

அத்துடன் இந்நிகழ்வில்   திரு.J.பிரதீபன், பணிப்பாளர் கற்கை நெறி துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள்  மாணவர்கள் பட்டமும் சூழலும்  பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்  திருமதி.T.சர்மிளா சுற்றுச்சூழல் பாதுகாப்பு எகெட் கரித்தாஸ் உத்தியோகத்தர்களான திரு.G.A.பிரான்சிஸ், திரு.K.ரஜித், திரு.A.M.பிரசாத் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிட்டத்தக்கது .