மாங்காட்டில் உணவு விசமானதில் பெண்னொருவர் மரணம் -மேலும் மூவர் வைத்தியசாலையில்

(ரஞ்சன்)
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் நஞ்சுத்தன்மையான கடல்மீனை சமைத்து சாப்பிட்டமையால் ஏற்பட்ட ஒவ்வாமையால் பெண் ஓருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் ஆபத்தான நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

குறித்த பெண் அவரது 4 மற்றும் 7 வயதான இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ஆகிய 4 பேரும் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நஞ்சுத்தன்மையான கடல்  மீனை உட்கொண்டதன் காரணமாகவே இவ் அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.